விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்…!!

Default Image

விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில், வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு விவசாயிகளின் நலனில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நகரத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பெரும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். விளை பொருட்களுக்கு உரிய விலை, இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் வளம் பெற்று இருப்பதாகஅமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்