விவசாயிகளின் உயிரை காவு வாங்கி வரும் கஜா…!!விஷம் அருந்தி விவசாயி தற்கொலை..!!! விவசாயிகளை இழந்துவருகிறது நாடு……காவுபோகும் உயிர்களை கண்டுகொள்ளாத மெத்தன அரசுகள்..!!கொந்தளிக்கும் மக்கள்..!!
கஜா கொடூரன் காவு வாங்க துடித்த கயவன் என்று தமிழக மக்களின் கோவத்தைய் சம்பாதித்த இரக்கமற்றவன்.இந்த கஜா புயலால் மக்கள் தங்கள் 30 ஆண்டுகள வாழ்க்கையை ஒரே நாளில் இழந்து தவித்து வருகின்றனர்.தங்கள் விளை நிலங்களில் பயிரிட்ட அனைத்தையும் அழித்து அதரவற்ற நிலையை உண்டாகிய புயலாக இந்த புயல் பார்க்கப்படுகிறது.மேலும் விவசாயிகளின் வாழ்வாதார நிலை தொடர்ந்து தற்கொலைக்கே தள்ளப்பட்டு வருகிறது.இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி அங்கே நிர்வாண முறையில் இன்னும் எத்தணையோ வழி முறைகளில் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு ஒரு தீர்வு ஏற்படாத சூழலில் மேலும் ஒரு விவசாயியை நாடு இழந்துள்ளது.சோறு போடுபவனை ஒவ்வொரு நாளும் பறிகொடுத்து விட்டு கடைசியில் நாடு சோற்றுக்கு என்ன..?? செய்யுமோ தெரியவில்லை தண்ணீரை போல் சோற்றுக்கும் கையேந்தும் சூழல் தான் வரும்.. நம் வயிற்றை நிரம்புவனை அரசுகள் வயிற்றில் அடிப்பது நியாயமா..?
இப்படி வளங்களை தான் அழித்தது என்றால் அது ஏற்படுத்திய அழிவை கண்டு மனமுடைந்து தங்கள் வாழ்வை அழித்து வருகின்றனர் விவசாயிகள்.இந்த புயல் தற்போது விவசாயிகளின் உயிரையும் காவு வாங்கி வருகிறது.கஜாவால் சேதமடைந்த மாவட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டமும் ஒன்று.இந்த மாவட்டத்திற்கு அருகே உள்ள சோழகிரிபட்டியில் கரும்பு விவசாயி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே துயரித்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தன் நிலத்தில் சுமார் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பை கஜா தனது சூறைக்காற்றால் சேதப்படுத்தியுள்ளதை கண்டு மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தன் கண்முன்னே சாய்ந்து கிடக்கும் கரும்பு தோட்டத்திலேயே விஷம் குடித்து சாய்ந்துள்ளார். விவசாயி சாமிக்கண்ணு ஊருக்கே சோறு போட்ட தெய்வங்கள் இப்படி தற்கொலை செய்து கொள்வது மனதை வேதனை பிழிந்தெடுக்கிறது விவசாயிகளின் தற்கொலையை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய ,மாநில அரசுகள் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.