விழுப்புரம் அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம்!
பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகின. கச்சேரி சலையில் உள்ள கோபுரம் வணிக வளாகத்தில் செயல்படும் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் மின்கசிவு காரணமாக அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பற்றிய தீ, அருகே உள்ள துணிக் கடைகளிலும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், 2 மணிநேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.