விழுப்புரம் அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை!
காதல் ஜோடி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் மகன் விக்னேசும், அதேகிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 16 வயது மகள் பூஜாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பூஜாவின் பெற்றோர் வெளியூரில் வேலை பார்ப்பதால் தனது பாட்டியின் பாதுகாப்பில் அவர் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பூஜாவும், விக்னேசும் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து சின்னசேலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.