விளைநிலங்களில் காற்றலை அமைப்பதற்கு இடைக்கால கேட் போட்டது..!உயர்நீதி மன்ற கிளை..!தூத்துக்குடி-நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!
தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் விவசாய நிலத்தில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கயத்தாறு கீழப்பாறைப்பட்டியைச் சேர்ந்த எஸ்.கே.அருமைராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில்வழக்கு தொடர்ந்தார்.
இதனை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளைவிதிகளை மீறி நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்கப்படுவதாக மனுவில் குற்றச்சாட்டுப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுட்டும் இடைக்கால தடை விதித்தும் வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.
DINASUVADU