கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் விலைஇல்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெரியாக்கவுண்டன்வலசு மற்றும் வேலம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு கால்நடை கிளை மருத்துவமனைகளை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஆண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என்றார்.
கால்நடைகளை பரிசோதிக்க வசதியாக லிப்ட், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய கால்நடை அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் சேவை 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.