மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,டி.டி.வி. தினகரனால், திவாகரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை, நாளை சசிகலாவுக்கும் ஏற்படக் கூடும் என விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆபிரகாம்பண்டிதர் சாலையில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, திவாகரனுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை தான், சசிகலாவுக்கும் எதிர்காலத்தில் ஏற்படும் என குறிப்பிட்டார்.
மேலும், டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றதால் அவர்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நினைத்து கொண்டு இருப்பதாகவும், அவரது தாய்மாமனான திவாகரனையே அவர்கள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்; இன்றைக்கு திவாரகனுக்கு ஏற்பட்ட நிலைதான் நாளை அவரது சித்தி சசிகலாவுக்கும் ஏற்படும் என்றார் ஜெயலலிதாவை மருத்துவமனையில் நாங்கள்யாரும் பார்க்க வில்லை எனவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…