விரைவில் குரங்கனி காட்டுத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் !
அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் குரங்கனி வனத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு ட்ரெக்கிங் சென்ற 22 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம், சூழல், குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை அரசு நியமித்தது. அவர் குரங்கனி சென்று வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார்.
விசாரணை விவரங்களை அறிக்கையாக தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.