மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,ஈரோட்டில் சோதனை முறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வாய்க்காமேடு பகுதியில் துணைமின் நிலையம் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, துணைமின் நிலையம் அமைக்க, 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறிய தனியார் கல்லூரி, தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறினார்.
தனியார் கல்லூரி நிலத்தை கொடுத்தால், அதற்கான தொகை வழங்கப்படும் எனக் கூறிய அவர், பெருந்துறை முதல் பவானி வரை சோதனை முறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…