விரைவில் அரசு பள்ளிகளில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகள்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Default Image

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில், ஆங்கில வழியிலான, LKG மற்றும் UKG வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றும் செம்மலை கூறினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரோடு ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களோடு இணைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டமும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்