பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
ஆசிலாபுரம் பகுதியில் பாலிஸ்பின் எக்ஸ்போர்ட்ஸ் ( POLYSPIN ) என்ற தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பிளாஸ்டிக் சாக்குகள் பேரல்கள் மற்றும் பண்டல்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில், காலை 7 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க 8 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.