விருதுநகர் அருகே பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

Default Image

 பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஆசிலாபுரம் பகுதியில் பாலிஸ்பின் எக்ஸ்போர்ட்ஸ் ( POLYSPIN ) என்ற தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பிளாஸ்டிக் சாக்குகள் பேரல்கள் மற்றும் பண்டல்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில், காலை 7 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க 8 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)