விருதுநகர் அருகே பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை மூலிகைகள் சேதம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பற்றி எரியும் காட்டுத் தீயினால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன. கம்பத்துமேடு மற்றும் பூலாமலை எஸ்டேட் பகுதி மலையின் உச்சியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீ சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
தகவல் அறிந்து சென்ற 25க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீ காரணமாக அங்குள்ள அரிய வகை மூலிகைகள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.