விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி! முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
வேலூர் மாவட்டம் கள்ளரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 27 பேர், ஆந்திர மாநிலம், குப்பம் அருகேயுள்ள கிராமத்திற்கு மாங்காய் பறிக்கும் வேலைக்குச் சென்றிருந்தனர். பணி முடிந்ததும், மாங்காய் லோடு ஏற்றிச் சென்ற லாரியிலேயே 27 பேரும் பயணித்துள்ளனர்.
தமிழக-ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் என்ற பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, 70 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த கூலித்தொழிலாளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 19 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டம் கல்நார்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. காயமடைந்த 22 பேருக்கு நல்ல முறையில் சிகிச்சை தர வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.