விநாயகர் வழிபாடுக்கு தமிழக அரசின் அரசாணையை கண்டித்து..!! திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை..!!
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை கண்டித்து திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
மேலும் அவர்கள் விநாயகர் சிலையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றையும் அளித்தனர்.
DINASUVADU