கரூர் மாவட்டத்தில் உள்ள சுக்காலியூர் ஊராட்சியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி செய்து வருபவர் நிறைமதி.
ஆசிரியர் நிறைமதி சிறுவயது முதலே ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு விடா முயற்சியுடன் படித்து வந்து அதற்கான தேர்வை எழுதி வந்தார்.அவர் ஆட்சியருக்கான அதற்கான தகுதி தேர்வை எழுதிய இரு முறையும் தோல்வி அடைந்துள்ளார். இருந்தாலும் தனது விடாமுயற்சியால் 2017 இல் நடந்த குரூப் 1 தேர்வில் நிறைமதி தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து கடந்த மாதம் நடத்தப்பட்ட நேர்காணலில் வெற்றிபெற்ற ஆசிரியர் நிறைமதி_க்கு சென்னை துணை ஆட்சியருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.