சென்னை ,
இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.
சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு தப்பி செல்ல முயன்ற அபிராமியை காவல்துறையினர் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது, விஜய்யின் கைகளைப் பற்றிக்கொண்டு, “எந்த ஆறுதலும், இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது. மீண்டு வாருங்கள் விஜய்; ஆண்டவன் துணை இருப்பான். நாங்க இருக்கோம்” என்று கலங்கிய கண்களுடன் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியைக் கண்டதும் விஜய் மனக்குமுறலால் உடைந்து அழுதுள்ளார். இது தொடர்பாக விஜய்யிடம் பேசுகையில்,“நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதே போல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசும், சைகைகளைச் செய்து காட்டும்” என்று உடைந்த குரலில் பேசினார் விஜய்…
DINASUVADU
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…