விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா,குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், வரும் 27ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. விபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், காயமடைந்தவர்களிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். அதேபோல், கொழுக்குமலை பகுதிக்கு அருகே வசிக்கும் பகுதியில் வாழும் மக்களிடமும் தீவிபத்து சம்பவம் குறித்து அதுல்ய மிஸ்ரா கேட்டறிந்தார்.
இதையடுத்து, குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருவதால், 27ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…