விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தகவல்!ரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை ரெடி!

Default Image

விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா,குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், வரும் 27ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. விபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், காயமடைந்தவர்களிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். அதேபோல், கொழுக்குமலை பகுதிக்கு அருகே வசிக்கும் பகுதியில் வாழும் மக்களிடமும் தீவிபத்து சம்பவம் குறித்து அதுல்ய மிஸ்ரா கேட்டறிந்தார்.

இதையடுத்து, குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருவதால், 27ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்