விசாரணையில் திடுக் தகவல்!ஜெயலலிதா அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே மரணமடைந்திருக்க வாய்ப்பு!

Default Image

மருத்துவர் சுதா சேஷய்யன்,உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே ஜெயலலிதா  மரணமடைந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாட்சி அளித்த அவர் உள்ளிட்ட 8 பேரிடம் நடத்திய குறுக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம்  பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூரபாண்டியன், இதனை கூறியுள்ளார்.  ஜெயலலிதா உடலில் காயங்கள் எதுவும் இல்லை என  சுதா சேஷய்யன் தெரிவித்ததாக அவர்  கூறினார்.

டிசம்பர் 4ம் தேதி காலையில்  ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு நன்றாக இருந்ததாக  அரசு மருத்துவரான சுவாமிநாதன்  கூறியுள்ளார். விசாரணையில் ஆஜரான ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் வெங்கட்ரமணன், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனையில் ஜெயலலிதா பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்