வால்பாறை வனப்பகுதியில் கொட்டும் மழையில் நக்சல் தடுப்பு போலீசார் ரோந்து..!

Default Image

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்குள் பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மெண்ட்கள் உள்ளன. தமிழக வனப்பகுதியின் தொடர்ச்சியாக கேரள வனப்பகுதி மிக அதிக பரப்பளவில் உள்ளது.

இதில் கேரள வனப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் நக்சல் தடுப்பு போலீசார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நக்சல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, ஆகியோர் அடங்கிய குழுவினர் வால்பாறை பகுதியில் உள்ள நெடுங்குன்று, பரமன்கடவு, ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 

இதில் வனப்பகுதிக்குள் புதிய நபர்களைக் கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்களிடம் அறிவுறுத்தினர்.

கொட்டும் மழையில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து சென்றதால் மலை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்