வால்பாறையில் பலத்த மழை – வீடு இடிந்து பெண் காயம்..!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 7 -ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று 6-வது நாளாக மழை நீடிக்கிறது.
கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தும், மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் உள்ள மல்லிகா என்பவரின் வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மல்லிகாவின் சகோதரி உமா மீது ஓடுகள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை மற்றும் சூறை காற்று காரணமாக தேயிலைத் தோட்ட பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் ஒரு சில எஸ்டேட் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்