வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு….
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை என்றும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.