வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை 50% ஆக குறைத்து அரசாணை வெளியீடு!
தமிழக அரசு வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை 100% இருந்து 50% ஆக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், சொத்துவரி சீராய்வு என்பது 2018-19 முதலாம் அரையாண்டு முதல் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வு தொடர்பான அரசாணை முன் தேதியிட்டு வெளியிடப்படவில்லை. புதிய வரி விகிதத்தின் படி முன் தேதியிட்டு சொத்து வரியை செலுத்த தேவையில்லை என்றும் வெளியிட்டுள்ளது.