தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு பிரதியை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் 13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில்,7000க்கும் அதிகமான சிசிடிவி பதிவுகளை பதிவிறக்கம் செய்ய 15 நாள் அவகாசம் தேவை என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ,ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம். சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய ஆகும் தாமதத்திற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று தெரிவித்தது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…