வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கசிவை சசரிசெய்யும் பணியை தொடங்கியது!
வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபடவுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கசிவைக் கண்டறிவதற்காக சார் ஆட்சியர் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது நேற்று மாலை சுமார் அரை மணிநேரம் ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில் கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். கசிவினால் ஆபத்து ஏதும் இல்லை என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் கசிவை சரிசெய்யும் பணியில் வல்லுநர் குழு இன்று ஈடுபடவுள்ளது. கசிவை சரி செய்து, கிடங்கில் உள்ள கந்தக அமிலம் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.