வறுமையை ஒழிக்க துல்லிய தாக்குதல் : ராகுல் காந்தி
- பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கவும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும்.
வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் சுரத்காரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலம் சுரத்காரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் என்றும், தங்களுக்கு வாக்களித்து வெற்ற பெற வைத்தால், வேலைவாய்ப்பின்மையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
மேலும், பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கவும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.