வரும் 19-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல்!
வரும் 19-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் விழா நடைபெறும் என்றும் ஆய்வு மாணவர்கள் மற்றும் முழுநேர பி.இ., பி.டெக்கில் படிப்புகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விழாவில் பட்டங்கள், தங்கப் பதக்கங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் பல்கலைக்கழக இணையதளமான www.annauniv.eduவில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.