வரும் 18 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக்கூட்டம்!

Published by
Venu

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக்கூட்டம் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பெரிய கூட்டத்தை எதிர்பாராத காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்ட போது காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர் ஆயுள் கைதி ஒருவரையும் கொலை செய்ததாக தகவல் வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறி ஆண்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரையும் கைது செய்து வந்தது.

எனவே துப்பாக்கி சூட்டை கண்டித்தும் துப்பாக்கி சூடை நடத்திய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர்.ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் ஆகஸ்ட் மாதம் வரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மனித உரிமை மீறலை கண்டித்தும் பேரணி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியும்  ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி  உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற ஜூன் 18 மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் தா.ராஜா தலைமையில் நடைபெறுகிறது.இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினறுமான பிருந்தாகாரத் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன்,புறநகர் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை ஆகியோர்  வகிக்கின்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.கே.பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ .வாசுகி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் வரவேற்புரை மற்றும் முடிவுரையாற்றுகிறார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…

3 hours ago

தமிழகத்தில் புதன் கிழமை (20/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…

4 hours ago

அமரன் வசூலில் மட்டுமில்ல ஓடிடியிலும் சாதனை! எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…

4 hours ago

நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…

5 hours ago

பிரச்சனை முடிந்தது., இந்தி இல்லை., இப்போது ஆங்கிலம்! – LIC விளக்கம்!

டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…

5 hours ago

“ஸ்டார்ட் அப் தொடங்குறேன் நிதி வேணும்”…கவனத்தை ஈர்த்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…

6 hours ago