வருசநாடு மலைப்பகுதியில் மாறுவேடத்தில் நக்சல் தேடுதல் வேட்டை..!
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குட்பட்ட காந்திகிராமம், அஞ்சரப்புளி, வலஸ்தொழுவு, வெள்ளிமலை, கூடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம், கஞ்சா செடிகள் பயிரிடுதல், போதை பொருட்கள் பயிரிடப்படல் ஆகியவை உள்ளதா? என கண்டறிய மாவட்ட நக்சல் தடுப்பு, போதை தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மற்றும் வருசநாடு போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இவர்கள் மாறுவேடத்தில் சென்று மலைகிராம மக்களிடம் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர். வருசநாடு வனப்பகுதி முதல் அரசரடி மலைகிராமம் வரை இந்த தேடுதல் வேட்டை நடந்தது.
வனப்பகுதியில் குழுக்களாக முகாமிட்டு அவர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முகம் தெரியாத நபர்கள் வனப்பகுதியில் உலவினால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.