வருகிறது ஆபத்து..! கொள்ளிடம் ஆற்றின் புது பாலத்திலும் சேதம்.!!

Default Image

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related image

1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர்.

Related image

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு கொள்ளிடம் ஆறு வறண்டு கிடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மணல் கொள்ளையர்கள், இரவு பகல் பாராது மணலைச் சுரண்டி எடுத்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமார் 10 அடி முதல் 15 அடி வரை மணலை சுரண்டி எடுத்ததன் விளைவாகவே பழைய பாலம் இடிந்ததாகக் கூறும் அவர்கள், தற்போது புதிய பாலத்துக்கும் ஆபத்து வந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

கொள்ளிடம் புதுப்பாலம் மட்டுமல்லாது, அனைத்துப் பாலங்களின் உறுதியையும் ஆய்வு செய்து மராமத்துப் பணிகளை செய்ய வேண்டும் என்றும் மணல் சுரண்டலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்