வரலாற்றில் இன்று ரா.கி. அன்று அழைக்கப்பட்ட தியாகி ஆர்.. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள்

Default Image

இன்று ரா.கி. அன்று அழைக்கப்பட்ட தியாகி ஆர்.. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள் ஜனவரி 5, 1902. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்த அவருக்கென்று ஒரு சைக்கிளைத் தவிர வேறு சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமானசெய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என கிருஷ்ணசாமி நாயுடுவின் நண்பர் காமராஜர் அவரைப்பற்றி புகழாரம் சூட்டினார்.
சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி
பார்வையில் எளியராகி பண்பில் உயர்ந்தோராகி
நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி
தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள் ராகி
-புலவர் விவேகானந்தன்-

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்