வரலாறு போற்றும்……..ராஜராஜ சோழன்…..1033 _வது ஆண்டு சதயவிழா….ஆயிரம் ஆண்டு கடந்தும் வாழும் ராஜராஜ சோழன்….சதயவிழா இசையுடன் தொடங்கியது…!!!!
வரலாறு போற்றும் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதயவிழா விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியுள்ளது.
ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகளை ஜஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டு கடந்தும் இன்றும் தமிழர்களின் அடையாளமாய்,ராஜராஜ சோழரும் அவர் கட்டிய உலகிலே சிறந்ததுமான பிரகதீஸ்வரர் ஆலயம் ,சோழனின் கம்பீர ஆட்சியையும் தமிழனின் கலை திறனையும் பறைசாற்றுகிறது தமிழனை ஒவ்வொரு முறையும் மட்டம் தட்டும் மடையர்களுக்கு எடுத்துரைக்கும் மகுடமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜராஜ சோழன் சதயவிழா கொண்டாட தஞ்சை தயராகி வருகிறது.தமிழை தேடி அண்டை நாடுகளை வரவைத்து தலைநிமிர செய்தவர் மாமன்னர் ராஜராஜசோழன் என்பது தான் நிதர்சனமான உண்மை.அவர் கட்டிய ஆலயத்தில் ஆயிரம் அதியசங்கள் அதனை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் தனி சிறப்பு அத்தகைய பெருமைபெற்றவர் மாமன்னர் ராஜராஜ சோழன் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU