வரதரை காண வரும் பக்தர்களுக்கு தென்னக ரயில்வே சிறப்பு அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டமே தற்போது விழாகோலம் பூண்டுள்ளது.காரணம் 40 ஆண்டுளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள் ஆசியை வழங்க வருபவர் அத்திவரதர் இந்நிலையில் இவரை காண மக்கள் வெளியூரில் இருந்து எல்லாம் வந்த வண்ணம் உள்ளனர்.
அங்கு தினமும் அலைஅலையாக திரண்டு வழிபட்டு வருகின்றனர்.மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் தரிசனம் செய்ய அதிகமாவதாலும் ,வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் அத்தி வரதர் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரெயில்களை இயக்கவுள்ளதாம்.அதன்படி நாளை முதல் சென்னை கடற்கரை- தாம்பரம் – காஞ்சிபுரம் வழியாக இந்த சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.மேலும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் மின்சார ரெயிலானது காலை 4.25 மணிக்கு எல்லாம் புறப்படும் என்றும் அறிவித்துள்ளது.