நீரவ் மோடியின் வங்கி மோசடி போல சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824.15 கோடி மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சிபிஐயிடம் புகார் அளித்தது.
சென்னை தியாகராய நகரில் ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த நிறுவனம் கிரிஸ் என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கியின் ஒப்புதலின் பேரில் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.50 கோடி கடனை கனிஷ்க் நிறுவனம் வாங்கியது. இந்தக் கடன்களை வைத்து மற்ற வங்கிகளிலும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடன் பெற்றுள்ளது. வரவு செலவு கணக்குகளை போலியாக காண்பித்து கிட்டத்தட்ட 14 வங்கிகளில் கனிஷ்க் நிறுவனம் ரூ.714 கோடி ரூபாய் கடன் பெற்றது.
இதில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி ரூ.214 கோடியும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ.115 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.45 கோடியும் கடன் வழங்கியுள்ளன. இந்த கடன்களுக்கு கொலேட்டரல் செக்யூரிட்டியும் வங்கிகள் பெற்றுள்ளன.
ஆனால், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தக் கடன்களுக்கான வட்டித் தொகையை கனிஷ்க் கோல்டு நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்த நிலையில் நிறுவனத்தை ஆடிட் செய்வதற்கு வங்கிகள் அமைப்பு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்து ஆவணங்களும் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐயிடம் வங்கிகள் கூட்டமைப்பு புகார் அனுப்பியது,
இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இதையடுத்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட 24 வங்கிகளில் மோசடி செய்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஜூன் 8 வரை காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…