சென்னை உயர்நீதிமன்றம் கடனை திருப்பி செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்கு கடன்கொடுக்காமல் இருப்பது நல்லது என வங்கிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
தீபிகா என்ற மாணவி நாகையைச் சேர்ந்தவர் ஆவர்.தமக்கு செவிலியர் படிப்புக்கான கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், மனுதாரரின் தந்தை ஏற்கெனவே பல முறை கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும், செவிலியர் படிப்பு கல்விக்கடன் திட்ட வரம்புக்குள் வராது எனவும் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதி வைத்தியநாதன் இதைக் கேட்ட பின், அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பலநபருக்கு வங்கிகள் கடன் வழங்கிய பின், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதால், அப்பாவி வங்கி ஊழியர்கள்தான் கடைசியில் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்தார்.
கடனை வசூலிக்க வங்கிகள் கடன்பெற்றோரின் பின்னால் ஓடுவதை விடுத்து, தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதே நல்லது என அறிவுறுத்தினார். இதையடுத்து, தந்தை பல கடன்களை செலுத்தாத நிலையில் மகளின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே என மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…