வக்காலத்து மனுக்களை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய அடையாள அட்டை அவசியம்-நீதிமன்றம்

Default Image

வழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை, தங்களது அடையாள அட்டையுடன் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வரதட்சணை வழக்கில் சிக்கிய ஒருவருக்கு அவரை அறியாமலேயே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிலமாதங்களுக்கு முன்னர் நீதிபதி வைத்தியநாதன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது,வழக்கறிஞர்கள் தங்களது பதிவு எண், நிழற்படம் ஆகியவற்றுடன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை திரும்பப்பெற கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, போலி வழக்கறிஞர்களைக் கண்டறிந்து களைவதற்கான ஆலோசனைகளை வழக்கறிஞர்கள் சங்கம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், வழக்கறிஞர்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் வக்காலத்து மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அடையாள அட்டை இல்லாதவர்கள் பார் கவுன்சிலில் விண்ணப்பித்து அடையாள அட்டைகளைப் பெற வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்