லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் !கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். லோக் ஆயுக்தா என்பது, ஊழல் அரசியல் என்ற பிணியை தீர்க்கும் மருந்தாகும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.