லோக் அயுக்தா சட்ட மசோதா அணைந்த விளக்கு போன்றது : மு.க.ஸ்டாலின்..!
பல் இல்லாத வாய் போல, பவர் இல்லாத லோக் அயுக்தா மசோதா உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உரிமைகளை அடகுவைத்து, அடிமை ஆட்சி நடத்துவோரிடம் ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தாவை எதிர்பார்க்க முடியுமா என அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் லோக் அயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது . 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிவுக்கு வந்தது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது. அதில் பல சர்ச்சைகளை கிளப்பியது எதிர்க்கட்சி.இதில் பலமுறை வெளிநடப்பும் செய்தது தமிழக எதிர்க்கட்சி .
பின்பு ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இந்த மசோதாவை ஆதரித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.
அதன்பிறகு, கடந்த 5-ந் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை போன்றவை குறித்து வெளியிட்டது.இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு ஒன்றில் நீதிபதிகள், “ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் அயுக்தாவை தமிழ்நாட்டில் அமைக்காதது ஏன்?. லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளன. பின்பு லோக் அயுக்தா திட்டத்தை அறிமுகப்படுத்திய பொது பவர் இல்லாத லோக் அயுக்தா மசோதா உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உரிமைகளை அடகுவைத்து, அடிமை ஆட்சி நடத்துவோரிடம் ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தாவை எதிர்பார்க்க முடியுமா என்று கூறி வெளிநடப்பு செய்தார்.