லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது
நேற்று முதல் பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.புதிய டென்டரில் கூறப்பட்ட தொகையை குறைக்க கோரியும், லாரி வாடகையை அதிகரிக்க கோரியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பேரேசன் வழக்கு ஒன்றை தொடந்தது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.