லாரிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் வெளியே எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்!
கந்தக அமிலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு ஏற்பட்டதை அடுத்து, வல்லுநர் குழு சென்று ஆய்வு நடத்தி கசிவு ஏற்பட்டுள்ள கிடங்கில் இருந்து அமிலத்தை வெளியேற்றும் பணிகள் தொடங்கின. இரவு 4 டேங்கர் லாரிகளில் அமிலம் ஏற்றப்பட்ட நிலையில், காலை 11 மணி முதல் அந்த லாரிகள் வெளியே சென்றன. இந்த அமிலம் கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டுசெல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.