கனிஷ்க் ஜூவல்லரி மற்றும் அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் மீது எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் கடன் வாங்கி 824 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் சார்பில், சென்னை மட்டுமின்றி, ஐதராபாத், கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புதுப்பாக்கத்தில் நகை உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது.
தயாரித்த நகைகளை கிரிஷ் ஜூவல்லரி மூலம் விற்றதுடன், சென்னையில் உள்ள இதர பிரபல நகை கடைகளுக்கும் விற்றுள்ளனர். இதன்மூலம் 20 கோடி ரூபாய் கலால் வரி மோசடி செய்ததாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் கனிஷ்க் கோல்டு நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
அடுத்த சில வாரங்களில் ஜாமினில் வெளியில் வந்த அவர் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் வாங்கி சுமார் 824 கோடியே 15 லட்சம் மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, கனிஷ்க் கோல்டு நிறுவனத்திற்கு கடன் வழங்குவதற்காகவே அமைக்கப்பட்ட எஸ்.பி.ஐ. வங்கி கூட்டமைப்பு டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்திற்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.இந்நிலையில் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…