ரூ.8,000 கோடி நடப்பாண்டில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு! அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,2011 ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகளுக்கு 34 ஆயிரத்து 80 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்கியிருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், நடப்பாண்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டது. அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் தள்ளுபடியில் 700 கோடி ரூபாய்க்கு மருந்துகள் விற்பனை ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.