ரூ.700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி …!அமைச்சர் கருப்பண்ணன்
ரூ.700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கருப்பண்ணன் கூறுகையில்,ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ.700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் .மேலும் ஈரோடு மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.