அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி என்பவர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அல்போன்ஸ், ஜியாவுல்ஹக் ஆகியோர் மூலம் 35 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப செல்வி முடிவு செய்தார். இதற்காக 35பேரிடம் தலா ரூ.1லட்சம் வாங்கி, அதனை அல்போன்ஸ், ஜியாவுல்ஹக்கிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் கடந்த 5.2.2018 அன்று 35பேரும் ஹாங்காங்கில் வேலைக்கு செல்லும் வகையில் விசா, விமான டிக்கெட் எடுத்து செல்வியிடம் கொடுத்துள்ளனர். அதனை செல்வி ஆய்வு செய்து பார்த்த போது அவை போலி விசா, போலி டிக்கெட் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய 2பேரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் உரிமையாளர் அல்போன்சை கைது செய்தனர். தலைமறைவான ஜியாவுல்ஹக்கை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…