ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைப்பு : தமிழக அரசு
- ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகமெங்கிலும் அதற்கான முன்னேற்பாடுகள், மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரூ.2 ஆயிரம் வழங்குவது சரியல்ல. இதனை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டமும், அதற்கான கணக்கெடுப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.