ரூ.20 கோடி லஞ்சம்.!அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிக்கு ஆபத்து …!திமுக பரபரப்பு புகார்

Published by
Venu

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர் கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.பல கோடிஇந்நிலையில் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள வீட்டில் ரூ 20 லட்சம் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விஜயபாஸ்கர் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.அனுமதி அளிக்கஇந்நிலையில் புதுக்கோட்டையில் கல் குவாரியிலிருந்து ஆயிரம் மடங்கு அதிகமாக கற்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் ஆகியவற்றை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளது குறித்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.வருமான வரித் துறைசோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.பணி நியமனம்அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பணத்தில் ரூ 12.96 லட்சத்தை கவர்களில் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கவர்களில் சத்துணவுத்து திட்டத்தின் கீழ் அரசு பணிக்கான நேர்முகத்தேர்வு கடிதம், செவிலியர் இடமாற்றத்திற்கான உத்தரவுகளுடன் லஞ்சப்பணமும் இருந்ததுள்ளது.வாக்குமூலம்இதனைத் தொடர்ந்து சோதனையில் சிக்கிய லஞ்சப்பணம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.விவரங்கள்எனவே லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் எவ்வளவு தொகை, எந்த நாளில் யாரிடம் லஞ்சமாக பெற்றார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டது.

Image result for திமுக

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக புகார் அளித்துள்ளது.அதில்  விஜயபாஸ்கர் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.வருமான வரிச்சோதனையின் போது விஜயபாஸ்கர் தந்தை வாக்குமூலம் தந்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

60 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago