ரூ.20 கோடி லஞ்சம்…!அமைச்சர் பதவி நீக்கம் …!முதல்-அமைச்சர் செய்ய வேண்டும் …!மு.க.ஸ்டாலின்

Published by
Venu

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர் கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.பல கோடிஇந்நிலையில் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள வீட்டில் ரூ 20 லட்சம் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விஜயபாஸ்கர் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.அனுமதி அளிக்கஇந்நிலையில் புதுக்கோட்டையில் கல் குவாரியிலிருந்து ஆயிரம் மடங்கு அதிகமாக கற்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் ஆகியவற்றை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளது குறித்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.வருமான வரித் துறைசோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.பணி நியமனம்அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Image result for mk stalin minister vijayabaskar

அந்த பணத்தில் ரூ 12.96 லட்சத்தை கவர்களில் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கவர்களில் சத்துணவுத்து திட்டத்தின் கீழ் அரசு பணிக்கான நேர்முகத்தேர்வு கடிதம், செவிலியர் இடமாற்றத்திற்கான உத்தரவுகளுடன் லஞ்சப்பணமும் இருந்ததுள்ளது.வாக்குமூலம்இதனைத் தொடர்ந்து சோதனையில் சிக்கிய லஞ்சப்பணம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.விவரங்கள்எனவே லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் எவ்வளவு தொகை, எந்த நாளில் யாரிடம் லஞ்சமாக பெற்றார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,சி.பி.ஐ. விசாரணையில் இருக்கின்ற நிலையில், அரசு பணிகளிலும் அமைச்சரின் தந்தையே லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட பிறகும், ரூ.20 கோடிக்கு மேல் லஞ்சம் வசூல் செய்த பட்டியல் சிக்கிய பிறகும் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, சகித்துக் கொள்ள முடியாதது.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சரும், காவல்துறை டி.ஜி.பி.யும் பதவியில் தொடர்ந்து கொண்டிருப்பதுபோல், இப்போது வருமான வரிச் சோதனையில் வெளிவந்துள்ள மெகா ஊழலுக்குப் பிறகும் பதவியில் நீடிக்க சுகாதாரத் துறை அமைச்சர் முயற்சி செய்வது அரசியல் சட்டத்திற்கு செய்யும் துரோகமாகும்.

ஆகவே, இனியும் எவ்வித காலதாமதமும் செய்யாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால் முதல்-அமைச்சர் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக ஆளுநர் , டாக்டர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

Published by
Venu

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

8 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

9 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

9 hours ago