138 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான சென்னையைச் சேர்ந்த பூபேஷ்குமார், போலி ஆவணங்கள் மூலம் 14 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில், 824 கோடி ரூபாய் கடன் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், கனிஷ்க் நிறுவனம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பூபேஷ்குமார், அவரது மனைவி நீட்டா ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வங்கிக்கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. பூபேஷ் குமார் கடந்த மே 25 -ம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் 138 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர். இத்துடன் சேர்த்து கனிஷ்க் நிறுவனத்தின் 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…