சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலத்தை 1350 கோடி ரூபாய்க்கு ஆக்ஸிஸ் வங்கியில் சட்ட விரோதமாக அடமானம் வைத்து தனியார் நிறுவனம் கடன் பெற முயற்சி செய்ததாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சதுப்பு நிலத்தை அடமானம் வைக்கும் வகையில் பத்திரப்பதிவு செய்யவோ அல்லது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடவோ இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் , அடமானம் வைக்கப்பட இந்த நிலம் சதுப்பு நிலம் அல்ல என வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்து, அன்றைய தினம் மனுதாரர் தன்னுடைய அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள், வீட்டு முகவரி மற்றும் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
dinasuvadu.com
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…